''எல்லோரும் சமம்தான் உட்காருங்க முதல்ல...'' -வங்கியில் குறவர் மக்களுக்காக போராடிய திமுக எம்எல்ஏ 

hhhhhhhh

ஜெய்பீம் படம் வெளிவந்த பிறகு சமூக அக்கறைக் கொண்டவர்கள் அனைவரும் அப்படத்தை வரவேற்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் தாங்கள் பழங்குடியின மக்களுக்கு உதவிய நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமக்கோட்டை நரிக்குறவர் காலனி மக்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தள்ளுவண்டி வாங்குவதற்காக ஒவ்வொரு வங்கியாக கடன் கேட்டு ஏறி இறங்கியுள்ளனர். எந்த வங்கியிலும் கடன் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். அதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்த ராஜா அவர்களுக்கு திருமக்கோட்டையில் உள்ள தனியார் வங்கியில் லோன் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆர்டரை வாங்கி கொடுத்துள்ளார். அந்த ஆர்டரை காட்டி போராடிப் பார்த்தும் எவ்வித பயனும் அம்மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த விஷயத்தை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நரிக்குறவர் காலனி இன மக்களை அவமரியாதை செய்த வங்கி மேலாளரை அம்மக்களுடன் சென்று சந்தித்தார். அப்போது அந்த வங்கி மேலாளர் முன்பு கடன் கேட்டவரை உட்கார சொல்கிறார். அப்போது அவர், 'வேண்டாம் சார்... வேண்டாம் சார்...' என தயங்க, உட்காருங்க முதல்ல எல்லோரும் சமம்தான் என உட்கார வைக்கிறார். பின்னர் வங்கி மேலாளரிடம், 'கடன் ஏன் கொடுக்க முடியாது, கடன் வழங்க அரசு என்ன வழிமுறை சொல்கிறதோ அதனை பெற்றுக்கொண்டு கடன் வழங்கலாம், கடன் வழங்க நடவடிக்கை எடுங்கள்' என்று வலியுறுத்துகிறார். 2019ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வு குறித்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

jai bhim MLA trb rajaa
இதையும் படியுங்கள்
Subscribe