Advertisment

தினமும் தண்ணிப் பிரச்சனைதாங்க... தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் கவலைப்பட்ட பெண்கள் 

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சிதங்கப்பாண்டியன் புதன்கிழமை மாலை வடபழனி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

Advertisment

அப்போது பொதுமக்கள் அவரிடம், "எங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பிள்ளைகளின் படிப்பிற்கு கல்விக்கடன் பெறுவதில் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் பல வருடங்களாக வாடகை வீட்டிலேயே வசிக்கிறோம். எங்களுக்கும் சொந்தமாக வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கப்பாண்டியன், "திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்கள் தலைவரிடம் பேசி உங்கள் எல்லாப் பிரச்சைக்கும் தீர்வுக்காணப்படும். கலைஞர் ஆட்சியில்தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து தான் தினமும் நமக்கு குடிநீர் கிடைக்கிறது. மக்கள் தொகை பெருகிவிட்டதால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம். எல்லோர் வங்கியிலும் 15 லட்சம் போடுவோம் என்று சொல்லி மக்களை மாற்றி ஆட்சி வந்தாரே பிரதமர் மோடி... அது போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். எங்கள் தலைவர் சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். எனவே நான் வெற்றி பெற்று வந்தவுடன் உங்கள் குறைகளை எல்லாம் தலைவரிடம் எடுத்துக் கூறி இந்த தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்வேன்" என்று உறுதியளித்தார்.

பின்னர் ஒவ்வொரு தெருவிலும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

campaign Candidate Thamizhachi Thangapandian Vadapalani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe