Advertisment

“வெட்டுக்கிளிகள் விட்டுப் போனாலும் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது...”- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Advertisment

publive-image

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தங்களது அடுத்தகட்ட நகர்வினை தேர்தல் நோக்கியே எடுத்து வைக்கின்றன. மேலும் அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தனது கட்சித் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தத் துவங்கிவிட்டனர். கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகளும் சிறிது சிறிதாகஆரம்பித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சட்டமன்றத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்குத்தலைமை தாங்கிய முன்னாள் முதல்வர்எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரானமுன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்துத்தொண்டர்களிடம் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “அதிமுக கூட்டத்தைக் கூட்டினால் எந்தக் கட்சியும் நம்முடன் போட்டியிட முடியாது. தமிழகத்தில் தனித்து நிற்கிறோம் என எந்தக் கட்சியையாவது சொல்லச் சொல்லுங்கள். அதிமுகவால் தனித்து நிற்க முடியும். நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நம்மை விட்டுச் சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. சில வெட்டுக்கிளிகள் அதிமுகவைவிட்டுச் சென்றாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது” எனக் கூறினார்.

admk sengottaiyan
இதையும் படியுங்கள்
Subscribe