Advertisment

“உடன்பிறப்புகள் உள்ளத்தால் சென்னையிலேதான் இருப்பீர்கள்” - மு.க.ஸ்டாலின்!

publive-image

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 7 ஆம் தேதியான நாளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அதன்படி பதவி ஏற்பு விழாவானது கரோனா நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு மிக எளிமையான முறையில் நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதுக்குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, “திமுக மீது நம்பிக்கை வைத்து மகத்தான தீர்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். ஆறாவது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கிறது கழகம். சட்டமன்றக் கட்சித் தலைவராக எனது பெயரை அண்ணன் துரைமுருகன் அவர்கள் முன்மொழிய, அருமைச் சகோதரர் கே.என்.நேரு அவர்கள் மொழிந்தார். மே 7 அன்று பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது.

Advertisment

உடன்பிறப்புகளின் அயராத உழைப்பால், முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி, இரத்தமும், வியர்வையும் சிந்தி கழகத்துக்காக உழைத்த உடன்பிறப்புகளை அழைத்து அவர்களுக்கு முன்னால் பதவியேற்க முடியவில்லை என்ற கவலை எனக்கு இருக்கிறது. கரோனா என்ற பெருந்தொற்றின் காரணமாக நடத்த இயலவில்லை. உடன்பிறப்புகள் உடலால் அவரவர் வீட்டில் இருந்தாலும், உள்ளத்தால் சென்னையிலேதான் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களது உழைப்பு கழக ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்று சேர்ந்து சம உரிமையும் கடைமையும் உடைய உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

cm stalin dmk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe