Skip to main content

''அவருக்கு ஒரு சிறு துரும்பளவு காயம் ஏற்பட்டாலும் அதற்கு மோடி தான் பொறுப்பு'' - திருநாவுக்கரசு பேட்டி

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Even if he got a small bruise, Modi is responsible for it" - Trinavukarasu Interview

 

ராகுல் காந்திக்கு ஒரு சிறு துரும்பளவு காயம் ஏற்பட்டாலும் அதற்கு மோடி தான் பொறுப்பாளர் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, ''ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்படிப்பட்டவர் யார்? அவர் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறதா? பிஜேபி இருக்கிறதா? என்பதை விசாரித்து அவர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ராகுல் காந்திக்கு பாதுகாப்பை கூடுதலாக அதிகரிக்க வேண்டும். அவருக்கு ஒரு சிறு துரும்பளவு காயம் ஏற்பட்டாலும் அதற்கு மோடி தான் பொறுப்பாளர். இந்த நாட்டின் பிரதமர் என்கின்ற முறையில் மோடி, ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தருவது கடமை. அதில் எந்தப் பிழையும் ஏற்படாமல் மத்திய அரசு கவனமாக இருந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.