Advertisment

“மேல்முறையீடு செய்தாலும்...” செங்கோட்டையன் ஒற்றை வரி பதில் 

“Even on appeal...” was the redhead's one-line reply

Advertisment

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, 18ம் தேதி இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் அடிப்படையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இ.பி.எஸ். தேர்வாகிறார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி மூன்றாவது தலைமுறையாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு அடுத்து கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார். இந்த முடிவின் காரணமாக வரும் 2026 தேர்தல் திருப்பு முனையாக அமையும். அதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஆட்சியை அமைப்பார். வரலாற்றை படைக்கின்ற தீர்ப்பாக இது அமைந்துள்ளது.”

Advertisment

தீர்ப்பை எதிர்த்து நாளை ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்ய உள்ளாரே என்ற கேள்விக்கு “சட்டம் தன் கடமையை செய்யும்” எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், “நீதிமன்றங்களை மட்டும் நம்பி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், இன்று உயர்நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பிற்கு நாளை அப்பீல் செய்கிறார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரும் பழனிசாமி தலைமையில் இருக்கவே விரும்புவார்கள். மனமாற தீர்ப்பை வரவேற்கிறோம்” எனக் கூறினார்.

admk sengottaiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe