Even an 80-year-old woman was sexually assaulted: People have no faith - Edappadi condemns

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் சவுக்கு தோப்பை ஒட்டியுள்ள உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேர் சவுக்குத் தோப்புக்குள் மூதாட்டியை அழைத்துச் சென்று வாயில் மண்ணை திணித்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

Advertisment

மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேலு என்பவர் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அங்கு முந்திரி காட்டில் பதுங்கி இருந்த சுந்தரவேலுவை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது சுந்தரவேல் போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் சுந்தரவேலை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதளப்பதிவில், 'போதைப்பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80 வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம். கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

Even an 80-year-old woman was assaulted: People have no faith - Edappadi condemns

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை. 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.