Advertisment

விலகுகிறார் இசக்கி சுப்பையா!!! அமமுக தலைமை அலுவலகம் எங்கு செல்கிறது? 

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று செய்தியாளர்களை சந்திப்பதாக நேற்று தெரிவித்திருந்தார் இசக்கி சுப்பையா.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு, தாங்கள் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறீர்களா? திமுகவில் இணைகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். அனைத்திற்கும் நாளை (இன்று) செய்தியாளர்களின் சந்திப்பின்போது பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

Advertisment

esaki subbiah ammk

செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோர் திமுக பக்கம் வந்ததால் இசக்கி சுப்பையாவும் திமுகவுக்கு வருவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தபோது, இசக்கி சுப்பையா அதிமுகவில் மீண்டும் இணைகிறார். இதற்காக அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசி நிகழ்ச்சி நேரம் இடம் அனைத்தையும் இறுதி செய்துவிட்டார். அந்த நிகழ்ச்சியை இசக்கி சுப்பையாதன்னுடைய மண்டபத்தில் தன்னுடைய செலவிலேயே பெரிய அளவில் வரும் 06ம் தேதியன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் என்று நமது நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கும் இடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது. அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலகினால், அமமுக தலைமை அலுவலகம் எங்கு செயல்படும் என்று அக்கட்சியினர்விவாதித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது திருநெல்வேலி தொகுதியை இசக்கி சுப்பையாகேட்க, டிடிவி தினகரனோ தென்சென்னையை வற்புறுத்தி கொடுத்துள்ளார். தேர்தலில் இசக்கி சுப்பையாதோல்வியை தழுவ, இங்கிருந்துதான் விரிசல் தொடங்கியது என்கின்றனர் அமமுகவினர்.

ammk Esakki Subbaiah head office TTV Dhinakaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe