Advertisment

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வாழ்த்து பெற்ற ஈரோடு சட்டமன்ற உறுப்பினர்! 

 Erode MLA receives congratulations from Minister I. Periyasamy!

Advertisment

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக சார்பாக வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதோடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உட்பட் அனைத்துசுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கச் செய்தார். இந்த தேர்தல் பரப்புரையின் போது தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர்கள் நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் திண்டுக்கல் பழைய நீதிமன்றம் எதிரே உள்ளதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற திமுக உறுப்பினர்வி.சி.சந்திரகுமார் தனக்கு தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரித்து மாபெரும்வெற்றியை தந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அவர்களுக்குநன்றி தெரிவிக்கும் விதமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து இனிப்புவழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியின் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Erode
இதையும் படியுங்கள்
Subscribe