Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் (படங்கள்)

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின்சார்பாக இயங்கி வரும் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்ற அமைப்பு நடத்திய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (14.02.2023) வெளியிடப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் திருநாவுக்கரசு வழிகாட்டுதல் படி, நிர்வாக இயக்குநர் பால் எபினேசர்மற்றும் தலைமை செயல் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலரும் இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு மக்களிடம் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில்பல்வேறு கேள்விகளை முன் வைத்துஅதன் அடிப்படையில்முடிவுகள் வெளியிடப்பட்டன. கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சிக்கு 42 முதல் 49 சதவீதமும், அதிமுகவுக்கு31 முதல் 36 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 6.90 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலும் மற்றும் நோட்டா, தேமுதிக, பிற கட்சியினருக்கு5.58 சதவீதம்வெற்றி வாய்ப்பு இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

Chennai Erode loyola college survey
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe