Advertisment

"இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்" - செங்கோட்டையன்

erode east by election former minister sengottaiyan talks about admk symbol 

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டுள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

நாளை மறுதினம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்" என்றார்.

admk Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe