பக்கத்து மாவட்டத்திற்கு மாறிய எஸ்.பி.க்கள்!

erode district

தமிழக அரசு 51 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதில் ஈரோடு மாவட்ட இளம் எஸ்.பி. சக்திகணேசன் நாமக்கல் மாவட்டத்திற்கும் நாமக்கல் எஸ்.பி. அருளரசு கோவை மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டனர். கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை மாவட்டம் பொள்ளாச்சி தான் சக்தி கணேசனின் சொந்த ஊர் அதே போல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தான் அருளரசுவின் சொந்த ஊர்.

இருவரும் ஏற்கனவே தங்களின் சொந்த மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி.க்களாக பணியாற்றினார்கள். இப்போதும் பக்கத்து மாவட்டத்திற்கே எஸ்.பி.க்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த இரண்டு எஸ்.பி.க்கள் மீதும் பெரிய அளவிலான புகார்கள் எதுவும் இல்லை என்பதோடு தங்கள் பணி புரிந்த மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமாக உழைத்தார்கள் என்ற நற்பெயரும் உள்ளது.

ஈரோட்டிற்கு சேலத்தில் எஸ்.பி.யாக இருந்த தங்கதுரை என்பவர் புது எஸ்.பி.யாக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

District Erode police sp
இதையும் படியுங்கள்
Subscribe