Skip to main content

ஈரோடு இடைத்தேர்தல்; இன்று வாக்கு எண்ணிக்கை

 

 Erode by-election; Counting of votes today

 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஈரோடு சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. வாக்கு பெட்டிகள் வைத்திருக்கப்படும் மையத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !