Advertisment

“நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதன் காரணம்...” - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

Erode by-election Congress candidate Elangovan interview

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரசின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லுவது இப்பொழுது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை மக்களைசந்தித்து ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்வதற்கு வாய்ப்பினைத் தாருங்கள் என்றும், என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்குஆதரவளித்து வாக்களியுங்கள் என்பதையும்வைத்துத்தான்பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். நான் திருவண்ணாமலைக்குபோக விரும்பவில்லை. அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.

சீமான் மிக நல்ல நண்பர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்கைகளை சொல்கிறார். ஆரம்பக்காலத்தில் பெரியாரை புகழ்ந்தார். இப்பொழுது கடுமையாக விமர்சனம் செய்கிறார். நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதன் காரணம் நான் பிறந்த ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும். பெரியார் ஈரோட்டின் நகர்மன்றத் தலைவராக இருந்து பல காரியங்களை செய்துள்ளார். என் தந்தை 1957-ல் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பல நற்காரியங்களை செய்துள்ளார். என் மகனும் இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் பல நற்காரியங்களை செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு என் மகன் செய்த பணிகளின் பட்டியலைவிநியோகிக்க இருக்கிறோம்.

Advertisment

பாராளுமன்றத்தில் இருந்தவர் இடைத்தேர்தலில் நிற்கின்றார் என என்னைப் பார்த்து சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கலெக்டரால் செய்ய முடியாத ஒன்றை ஒரு பியூனால் செய்ய முடியும். கலெக்டராக இருந்தால் மேஜையில் பேனைவினை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். பியூனாக இருந்தால் மக்களோடு ஒருவராக இருந்து சேவை செய்ய முடியும்.எனக்கு இரண்டும் ஒன்றுதான்” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe