Skip to main content

ஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும்... தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்... - ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
E.R.Eswaran



ஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும் என்றும், தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு தேவையா, இல்லையா என்ற அரசாங்கத்தினுடைய தடுமாற்றம் வெளியில் தெரிகிறது. ஊரடங்கினால் மட்டும் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்பது உலகமே அறிந்த உண்மை. ஊரடங்கு நேரத்தில் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகளை மக்கள் பயத்தில் மீறுவதால் தான் தமிழகத்திலும் நோய் பரவல் அதிகமாகியிருக்கிறது. சென்னையில் ஊரடங்குக்குள்  ஊரடங்கை போட்டதால் அத்தியாவசிய காய்கறிகளை குறுகிய காலத்தில் வாங்க வேண்டிய அவசியம் மக்களுக்கு ஏற்பட்டது. அதனால்தான் கோயம்பேட்டில் கூட்டம் கூடியது. அதன் விளைவாகதான் தமிழகத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை தினசரி கூடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவல் ஊரடங்கை தளர்த்தியதால் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கை தளர்த்திவிட்டு மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா என்பதை அரசு கடுமையாக கவனிக்க வேண்டும்.

 

 

1.பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கல்யாண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள் தவிர மற்ற செயல்பாடுகள் முழுமையாக கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கப்பட வேண்டும்.

2.மாவட்ட எல்லைகள் மக்கள் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும்.

3.வேறு மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணிகள் அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும்.
 

4. தொழிற்சாலைகளும், வியாபார தலங்களும் திறக்கப்பட்டு இருந்தாலும் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் எதிர்பார்த்ததுபோல பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கட்டுப்பாடுகளோடு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட வேண்டும்.

5. விவசாய விளைப்பொருட்களையும் சிறு தொழில் உற்பத்திப் பொருட்களையும் வாங்க வருகின்ற மற்ற மாவட்டம், மற்ற மாநிலத்தவர்கள் வர முடியாத காரணத்தால் விற்பனையின்றி பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அதை கருத்தில் கொண்டு மாவட்ட மாநில எல்லைகள் கட்டுப்பாடுகளோடு திறக்கப்பட வேண்டும்.

6. முக கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

குறிப்பிடப்பட்ட தளர்வுகளை கொடுத்து பொருளாதார நடவடிக்கைகள் வேகப்படுத்தப் படாவிட்டால் வேலையின்மையும், வருமானமின்மையும் தமிழக அரசுக்கு சவாலாக அமையும். ஊரடங்கு தளர்வால் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டால் நோய் பரவல் அதிகமாகலாம். அதனால் மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்றுவது தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவரவர் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சட்டத்தின் வாயிலாக அரசு அதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சை பேச்சு; திமுக கூட்டணி வேட்பாளர் மாற்றம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Arrogant speech; DMK alliance candidate change

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது.

திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கட்சியின் சார்பாக சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் சூரியமூர்த்தி பேசிய பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் வைரலானது. எதிர்க்கட்சியினர் வேட்பாளரின் பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைத்திருந்தனர். இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.