Advertisment

EPS's response to Speaker Appa's allegations

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்களைக் கொண்டு பேசுகிறார்கள்” எனவும், தனக்கு மூன்று முறை ஒருவர் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் தெரிவித்திருப்பதற்கு ஆதாரம் இருந்தால்தான் நாம் பேச முடியும். சபாநாயகர் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஜனநாயகப்படியும், அவையின் மரபையும் கடைப்பிடிக்கிறாரா? எனவே அவர் சொல்லி இருப்பது சரியா தவறா என நாங்கள் எப்படி உறுதிப்படுத்த முடியும். சட்டப்பேரவை தலைவர் என்பவர் பொதுவானவர். ஆனால், அவர் ஒரு கட்சிக்காரர் போல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.