EPS,OPS Delhi Visit

Advertisment

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விமானம் மூலம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளநிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்அமித்ஷா ஆகியோரை நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில்ஓபிஎஸ்-சை தொடர்ந்து அதிமுகவின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை நாளை சந்திப்பதற்காக இன்று இரவு எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம், 'தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு தினமும் நடைபெற்று வருகிறது. அதேபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவதாக கூறிய திமுக தற்போது மாணவர்களைநீட் தேர்வு எழுத உத்தரவிட்டுள்ளது' என ஓபிஎஸ்-இபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இவையனைத்தையும் கண்டித்து வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஓபிஎஸ்-இபிஎஸ்ஸின்டெல்லி பயணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.