சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அப்பலோ மருத்துவமனைக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். இது சாதாரண மருத்துவ பரிசோதனை என்றும் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனைகள் முதல்வருக்க்கு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் திமுக பொருளாளர் துரைமுருகனும், முதல்வர் எடப்பாடியும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகியது.