Advertisment

இமேஜை எப்படியாவது காப்பாத்தணும்... டிசம்பரிலேயே தேர்தல் வைங்க... முதல்வரின் ரகசிய கோரிக்கை!

தற்போது பெங்களூர் சிறைச்சாலையின் இறுக்கமான பூட்டு சசிகலாவுக்காக நெகிழ ஆரம்பித்துள்ளது என்று கூறிவருகின்றனர். அதாவது சீக்கிரமாக விடுதலை அடைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதாவது சமீபத்தில் சசிகலா பற்றி, பிரதமர்மோடி விசாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் அவர் ரிலீசாக போகிறார் என்பதை முதல்வர்எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சசிகலா விடுதலை அடைவதை எடப்பாடி பழனிசாமிவிரும்பவில்லை. அதனால், கொஞ்சம் அப்செட்டான அவர், உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்புகொண்டு, மோடிஜி, சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கச் சொல்கிறார். ஆனால் அதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு உறுதியை நீங்கள் கொடுக்க வேண்டும்.

Advertisment

eps

நான்தற்போது மேற்கொண்டிருக்கும் கரோனா நிவாரணபணிகளால், என்னை தமிழகத்தின் காவல் தெய்வமாக,மக்களிடம் இமேஜை உயர்த்தும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. அதை அரசியல் அலையாக மாற்றி, இதே இமேஜோடுதேர்தலை சந்திக்க விரும்புகிறேன். அதனால் டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும். மறுபடியும் முதல்வராகிவிட்டால் அதுக்கப்புறம் சசிகலா ரிலீசானாலும் எனக்குக் கவலை இல்லை என்று சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது.

admk coronavirus eps issues politics
இதையும் படியுங்கள்
Subscribe