Advertisment

அமைச்சர்களை சமாளிக்க திமுக ஃபார்முலாவைக் கையில் எடுத்த இபிஎஸ்...  ஃபார்முலா எப்படிப் போனது? அதிருப்தியில் திமுக!

admk

அ.தி.மு.க. அமைச்சர்களைச் சமாளிக்க தி.மு.க.வின் ஃபார்முலாவை எடப்பாடி ஃபாலோ செய்வதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது தனக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் அமைச்சர் வேலுமணியின், மூவ்களைப் புரிந்து கொண்ட எடப்பாடி, அவரை எப்படி எல்லாம் கன்ட்ரோல் செய்வது என்று வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் தி.மு.க.வின் ஃபார்முலாவைதான் ஃபாலோ பண்ண முடிவெடுத்துள்ளார். அதாவது, கலைஞர் இருந்த போது, கட்சிப் பதவிகளில் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறிய கனிமொழி, அதை மகளிர் அணி சார்பில் அவரிடம் அறிக்கையாகக் கொடுத்துள்ளார். அதில், ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து, அவற்றில் ஒரு மாவட்டத்திற்கு அங்குள்ள பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரையும், மற்றொரு மாவட்டத்திற்கு மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவரையும் மா.செக்களாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார். இதே ஃபார்முலாவை கிளைக்கழகம் வரை பின்பற்றினால், பெரும்பான்மைச் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச் சாட்டுகளையும் தவிர்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.''

Advertisment

இதனையடுத்து தி.மு.கவில் இந்த ஃபார்முலா ஒரு சில மாவட்ட அளவில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்தப் ஃபார்முலாவை, முன்பு தி.மு.கவின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஓ.எம்.ஜி.யில் இருந்த சுனில், தற்போது அ.தி.மு.க.வின் அரசியல் அட்வைசரான நிலையில் எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். நல்ல பாலிஸி என்று கூறிய எடப்பாடி, இதையேநம் கட்சியின் மா.செ., ஒ.செ. பதவி நியமனங்களில் நடைமுறைப்படுத்தி, பெரும்பான்மை- சிறுபான்மை சமுதாயங்களின் ஒருங்கிணைப்போடு தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்கிறமுடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஃபார்முலா வேலுமணியை மட்டுமல்ல, தங்கள் பழைய ஆலோசகர் மூலமாகவே எதிர்த்தரப்பிடம் தங்கள் ஃபார்முலா போனது தி.மு.க. தரப்பையும் அதிர வைத்துள்ளது. அதனால், தி.மு.க. சைடிலும் தொடர்ந்து டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

issues politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe