Advertisment

admk

தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் டாஸ்மாக்கைத் தமிழக அரசு இப்படிபட்ட சூழலில் திறக்க என்ன காரணம் என்று விசாரித்த போது, கடந்த 7- ஆம்தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள்திறக்கப்படும் என்று தமிழக அறிவித்தது மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதற்குதி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், உளவுத்துறை ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்டை அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அதில், கரோனா பீதியாலும் டாஸ்மாக் மூடப் பட்டதாலும் தமிழகத்தில் இப்போது க்ரைம் ரேட் சுத்தமாகக் குறைந்துவிட்டது. டாஸ்மாக் கடைகளைத் திறந்தால், வருமான நெருக்கடியில் இருக்கும் பலரும் க்ரைம் செயல்களில் ஈடுபடுவார்கள். அதனால் குற்றங்கள் வெகுவாக அதிகரிக்கும். அதிலும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற நிலை இப்போது இருப்பதால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்படுமென எச்சரித்திருப்பதாகச்சொல்கின்றனர்.