EPS targeting Madurai; An end to the guesswork?

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி மாநகரில் வரும் 24ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவும், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவும், அதிமுக துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 ஆம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவாக வரும் 24 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதிமுக தொண்டர்கள் அங்கு லட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள்” எனக் கூறினார்.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்கள் கே.சி.பழனிசாமி போன்ற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கலந்து கொள்வார்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், “கட்சியில் தான் அவர்கள் இருக்கிறார்கள். மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார். சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். அனைவரும் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.

Advertisment

கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் காரணம். அனைவரையும் சேர்ப்பதற்கு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நிச்சயமாக நாங்கள் சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சிக்காரர்களிடம் நான் வித்தியாசம் பார்ப்பது இல்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெறும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலம் குறைவாக உள்ளது என அரசியல் களத்தில் பேச்சுகள் அடிபடும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்த மதுரையை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.