Skip to main content

அதிமுகவில் அதிரடி நடவடிக்கைக்கு ரெடியான எடப்பாடி... கலக்கத்தில் நிர்வாகிகள்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

தி.மு.க பொதுக்குழுவுக்கு முன்பாக கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டும் முடிவில் எடப்பாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட்டு, பிறகு சட்டமன்றக் கூட்டத்தை நடத்தலாமா? அல்லது சட்டமன்ற கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

eps



அதேபோல் திருப்தியாக  செயல்படாத மா.செ.க்கள் சிலரை மாற்றும் முடிவிலும் எடப்பாடி உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக, நெல்லை மா.செ.பிரபாகரனுக்கு பதிலாக அந்தப் பதவியில் எக்ஸ் எம்.பி.சௌந்திரராஜனையும், கன்னியாகுமரி மா.செ.அசோகனுக்கு பதில், சிவ.செல்வராஜையும் புதிய மா.செ.க்களாக நியமிக்கவும் அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. அதேசமயம் அமைச்சரவை மாற்றத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு வைத்து கொள்ளலாம் என்ற எண்ணமும் அவரிடம் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் சொல்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.