Advertisment

மிரட்டிய மதுசூதனன்! அதிர்ந்துபோன இ.பி.எஸ்.!

Shock

அ.தி.மு.க.வில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மோதல் வலுவடைந்துள்ளது. சென்னை ராயபுரம் கூட்டுறவு சங்க தேர்தலில் மதுசூதனனும், அமைச்சர் ஜெயக்குமாரும் மோதிக்கொண்டனர். இதனால் அப்செட்டான மதுசூதனன், ஜெயக்குமாருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டார்.

Advertisment

ராயபுரம் கூட்டுறவு சங்க தேர்தலில் ஜெயக்குமார் ஆதரவாளர்களால் வெட்டப்பட்ட மதுசூதனனின் ஆதரவாளரான தேசப்பனை முன்னிறுத்திஅதிமுகவில் நிலவும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மோதலை அவைத்தலைவரான மதுசூதனன் வெளிப்படையாக எடுத்துக்கூற திட்டமிட்டிருந்தார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுதொடர்பாக அவர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்துப் பேசினார். நிலைமைகள் விபரீதமாவதை கண்ட இ.பி.எஸ். உடனடியாக மதுசூதனனை தொடர்புகொண்டு, நான் எல்லாவற்றையும் சரி செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்து பத்திரிகையாளர் சந்திப்பை கைவிட கூறினார்.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.ஸிடமும் இதுகுறித்து பேசினார். இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் இணைந்து கேட்டுக்கொண்டதால், ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் ராயபுரம் கூட்டுறவு சங்கத்தில், தன்னுடைய ஆட்கள் நிர்வாகிகளாக நியமிக்காவிட்டால், தான் மறுபடியும் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இடையே நடைபெறும் மோதலைப் பற்றி பேசுவேன். இது தமிழ்நாடு முழுக்க இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மோதலை தோற்றுவிக்கும் என மதுசூதனன் மிரட்டலால் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயுள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அதேநேரத்தில் ஜெயக்குமார், நான் மதுசூதனனின் கோரிக்கைக்கு அடிபணியமாட்டேன் என முரண்டு பிடித்து வருகிறார். அதிமுகவில் கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி நடைபெற்ற மோதல் மும்முரம் அடைந்துள்ளது.

jayakumar Clash aiadmk Madhusudhanan ops eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe