/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/epsni_6.jpg)
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதையே தொழிலாகக் கொண்ட மு.க.ஸ்டாலினின் தி.மு.க அரசு, பிஞ்சு குழந்தைகளின் நலத்தோடும் விளையாடுவதை, அ.தி.மு.க சார்பில் கண்டிக்கிறேன்.
உடனடியாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)