EPS says Eliminating unwanted things is the first step towards maintaining law and order

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கண்ணியம் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜெமினி. அந்த பகுதி மக்களால் 'சில்க்' என அழைக்கப்பட்டு வந்தார். ஜெமினி கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் போதைக்கு அடிமையான இளைஞர் ஜெமினி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு போதை ஊசி செலுத்திக் கொள்ளும் பழக்கத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் அதே பகுதியை சேர்ந்த அக்னி என்ற இளைஞர் போதை ஊசி போட்டுக் கொள்ள ஜெமினியை அழைத்துக் கொண்டு கண்ணியம் நகர் ஓட்டியுள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி விட்டு மயங்கி கிடந்துள்ளனர். அப்பொழுது சுனில், அருண்குமார், கார்த்திக், திலீப் குமார் உள்ளிட்ட ஐந்து நபர்கள் சேர்ந்து ஜெமினியை கொலை செய்து ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். அதே சமயம் தன்னுடைய மகனை காணவில்லை என்று ஜெமினியின் தந்தை சரவணன் செய்யாறு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.

Advertisment

ஜெமினி மீது ஏற்கனவே சவ ஊர்வல வாகனத்தை எரித்தது; போதை ஊசி விற்பனை என பல வழக்குகள் உள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஏரியில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போதை ஊசி விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் போதை ஊசி விற்பனை தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன். ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.

Advertisment

 EPS says Eliminating unwanted things is the first step towards maintaining law and order

போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம் என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே! போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு உணர வேண்டும். இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.