Advertisment

எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை மற்றும் உறுதிமொழி ஏற்பு

EPS Pledge Acceptance at MGR's Memorial

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு என தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இன்றும் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையிலேயேஎம்.ஜி.ஆரின் சமாதி பூக்களால் இரட்டை இலை சின்னம் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.

Advertisment

இந்நிலையில், எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அதிமுகவினர்சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

admk eps
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe