Skip to main content

திமுகவிற்கு செக் வைக்க எடப்பாடி போட்ட திட்டம்... அலெர்ட்டான திமுக!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிவந்தார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் பஞ்சமி நிலம் என்று நிரூபிக்கவிட்டால் ராமதாஸ் அரசியலை விட்டு விலகத்தயாரா என்றும் கேள்வியும் எழுப்பினார். இந்த நிலையில் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று எடப்பாடி தெரிவித்து இருந்தார். அதோடு தி.மு.க. தலைமை மீது, குடும்ப ரீதியிலான நெருக்கடியையும் அரசு ஏற்படுத்த திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணி மீது பண மோசடி வழக்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் பதிவானது. 
 

politics



உடனே புகார் கொடுத்தவர் மீது சமாதானம் பேசப்பட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து, அந்தச் சிக்கலில் இருந்து ஜோதிமணி மீட்கப்பட்டார். இருந்தும் மேலிட விருப்பப்படி, அந்தப் புகாரை சென்னை மத்திய குற்றப் பிரிவு, தன்னிடம் கொடுக்கும்படி வாங்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையறிந்ததும் கலைஞர் மகள் செல்வியும் அவர் கணவர் முரசொலி செல்வமும் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், "ஜோதிமணி, தனிப்பட்ட முறையில் செய்யும் எந்தத் தவறுக்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம்'’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 
 

 

சார்ந்த செய்திகள்