EPS honors MGR's birthday

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் தீய சக்திகளை ஒழிப்போம் என முன்னாள் முதல்வர் இ.பி.எஸ் சபதம் மேற்கொண்டுள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர்மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் 106 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, “ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49% இருந்து 68% ஏற்றிய சமூகநீதி காவலர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அவர் புகழைப் போற்றி, தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து, கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்” எனக் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.