நாடாளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து தற்போது வரை அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிமாகி வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவியைப் பறித்து விட்டு, தனக்கு நெருக்கமான நபர்களுக்குப் பதவிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறாராம் தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யா. குறிப்பாக 53 வட்டச் செயலாளர்களில் 43 பேரை அவர் மாற்றிவிட்டு தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர்.

admk

Advertisment

Advertisment

கட்சியில் பதவிகளைப் போட கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழு இருந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் விருப்பப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இதை எடப்பாடி கவனத்துக்குக் கொண்டுபோயும் அவர் கண்டு கொள்ளவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கோபமான அ.தி.மு.க. வினர், எடப்பாடி எப்படி நடவடிக்கை எடுப்பார்? அவருக்கு ஈ.சி.ஆரில் பங்களா கட்டிக் கொடுத்த சத்யாவை அவர் எப்படி தட்டிக் கேட்பார்ன்னு கோபக்குரல் எழுப்பிய படியே கட்சியின் தலைமைக் கழகத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு முற்றுகையிட்டாங்க. இது எடப்பாடியை அதிர வச்சிருக்குனு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.