Advertisment

ஜெயலிதாவிற்கு ஏற்பட்ட அதே பயம் எடப்பாடிக்கும்... யாரைக் கேட்டு இப்படி பண்றீங்க... எடப்பாடி மீது கோபத்தில் பாஜக!

சமீபத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. டேமேஜ் ஆனதால், அதைச் சரிசெய்வதற்கு எதையாவது அதிரடியாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக சொல்லப்படுகிறது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40-க்கு 40-ல் முழுவதுமாக தோல்வியடைந்தது. இதனால் ஷாக்கான அப்போதைய முதல்வரான ஜெயலலிதா கூட மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு-கோழி பலியிடத் தடை, அரசு ஊழியர்கள் மீதான எஸ்மா, டெஸ்மா இதையெல்லாம் ரத்து செய்தார். அதே போல், முதல்வர் எடப்பாடி தற்போது வேளாண் மண்டல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் பலத்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

eps

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு தான் இது பற்றி முறைப்படி அறிவிக்கவேண்டும் என்றும் சொல்கின்றனர். வேளாண் பாதுகாப்பு மண்டலத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்கக்கூடாது. ஆனால் அண்மையில்தான் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதேபோல் எடப்பாடியும் அண்மையில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்கின்றனர். ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடுகிறவர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால், அந்தப் பகுதியில் நாலடிக்கு மேல் மணலைத் தோண்டி எடுக்கக் கூடாது. ஆனால் இப்போது எடப்பாடி தரப்பு ஆளுங்களே பல அடி ஆழத்துக்குக் குழி தோண்டி, ஆற்று மணலையும் சவுடு மண்ணையும் எடுத்துக்கொண்டு இருக்கிறாரகள் என்று பொதுமக்களே கேள்வி கேட்டுள்ளனர். இந்த நிலையில், யாரைக்கேட்டு இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளீர்கள் என்று இன்னொரு பக்கம் மத்திய அரசு, தலைமைச் செயலாளர் சண்முகத்தைக் கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர். இப்படி மத்திய அரசின் கோபத்தை இதன் மூலம் சம்பாதித்திருக்கும் எடப்பாடி, டெல்லியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் அங்கிருக்கும் தன் லாபி மூலம் முடுக்கிவிட்டுள்ளார் என்கின்றனர்.

admk Announcement eps jayalaitha politics
இதையும் படியுங்கள்
Subscribe