தற்பொழுது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி இன்று (18.03.2023) தாக்கல் செய்தார்.