EPS continued case... judgment postponement!

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது நடந்த விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய தயாராகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மற்றொரு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கொடுத்த அறப்போர் இயக்கம் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். 1.10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது புகார் கொடுத்ததாக அறப்போர் இயக்கம் வாதிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.