Advertisment

ஈரோடு இடைத்தேர்தல்; சேலத்தில் எடப்பாடி பழனிசாமி  ஆலோசனை 

eps consults with admk former ministers regarding Erode East by-election

ஈரோடு கிழக்குதொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

Advertisment

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத்தழுவினார். இந்த நிலையில்,ஈரோடு கிழக்கு தொகுதிஇடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகாபோட்டியிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்ததொகுதியில் அதிமுகவேநேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி. ராமலிங்கத்தை களமிறக்க உள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

byelection Erode Salem admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe