Advertisment

EPS தலைமையிலான கூட்டத்தில் OPS ஆப்சென்ட்..! குழப்பம் இல்லை என்கிறார் வைத்திலிங்கம்..!

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பி. முனுசாமி, 7 -ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள் என்று கூறினார். முன்னதாக கூட்டத்தில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்க வேண்டும் என்ற விவகாரத்தில் காரசாரமாக விவாதம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 8ம் கட்ட ஊரடங்கு நிறைவடைவதால், மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் நடத்திவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார்.

Advertisment

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே எந்த குழப்பமும் இல்லை. ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இல்லை. 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். கட்சி வளர்ச்சிக்காக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

admk ops R. Vaithilingam
இதையும் படியுங்கள்
Subscribe