EPS Condemnation on Farmer Suicide in District Collector's Office

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ததது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையின் போது விவசாயி ஒருவர் தீக்குளித்து இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பொய் வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன் அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை முற்றிலும் மறந்ததோடு அல்லாமல், நதிநீர் உரிமைகள் முதல் மின்சார விநியோகம் வரை அனைத்திலும் தொடர்ச்சியாக விவசாயப் பெருங்குடி மக்களை வஞ்சித்து வரும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்.

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இனி ஒரு விவசாயியும் அரசின் வஞ்சிப்பால் தன்னை வருத்திக் கொள்ளா வண்ணம் விவசாயிகளின் குறைகளை தீர்த்துவைக்குமாறு தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment