''விஜயகாந்த் பாடலை ஏன் போடல...'' -இ.பி.எஸ். கூட்டத்தில் தேமுதிக தொண்டர்கள் ரகளை

’’மக்கள் மனம் புண்படும்படி ஸ்டாலின் எல்லை மீறிப்பேசுவது மக்களுக்கு பிடிக்கவில்லை, அது அவருக்கு நல்லதல்ல. லோக்சபா தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்,’’ என ஆவேசமாக பொங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

மயிலாடுதுறை நடாளுமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து கும்பகோணம் பிள்ளையார் கோவிலில் ஐந்து முனை சந்திப்பில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது வருகைக்காக கூட்டத்தை திரட்டவும், கூட்டம் கலையாமல் இருக்கவும் குத்தாட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் கும்பகோணம் நகர அதிமுகவினர்.

Mayiladuthurai

அங்கு வந்துபேசிய முதல்வர் பழனிசாமி, ’’ மத்தியில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் என்னை மண்புழு என்கிறார். தஞ்சை மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. நானும் விவசாயிதான் விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரம் மண்புழு, அதேபோல் மக்களுக்கு நாங்கள் மண்புழு உரமாக இருக்கிறோம் இருப்போம்’’, என்றவர் மேலும் முதல்வர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் காது ஜவ்வு கிழியும்வரை அதிமுக தொண்டர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஸ்டாலின் ஒரு வைரஸ் கிருமி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்துவோமே அதுபோல் ஸ்டாலின் சகாப்தம் இந்தத்தேர்தலுடன் முடிக்க வேண்டும் மக்கள்மனம் புண்படும்படி ஸ்டாலின் எல்லை மீறிப் பேசவேண்டாம்.’’ என்றவர்.

மேலும் ''இரண்டு ஆண்டுகளில் 35 ஆயிறம் போராட்டங்களை எதிர்கொண்டவன், இவ்வளவு போராட்டங்களால் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.’’ என்றார்.

அவரின் பேச்சை கேட்ட வர்த்தகர்களோ, ’’எங்கப்பன் குதுருக்குள்ள இல்லன்னு சொல்லுற கதையா எடப்பாடி கதை இருக்கு, எடப்பாடி தலைமையிலான இரண்டாண்டு ஆட்சியில் இவ்வளவு போராட்டமா இவங்க ஆட்சி செய்யுறாங்களா இல்ல பஞ்சாயத்து பண்ணி பணம் சம்பாதிக்கிறாங்களான்னு சந்தேகமா இருந்தது இதை எடப்பாடியே ஒத்துக்கொண்டார், இவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தா 23 ம் புலிகேசி மாதிரி தமிழகம் போராட்டக்களமாக்கிடுவார்,’’ என வெளிப்படையாகவே பேசினர்.

இதற்கிடையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குத்தாட்ட கலைநிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி தலைவரான நடிகர் விஜயகாந்தின் பாடல் போடவில்லை என தேமுதிக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி கூட்டத்தை தெறிக்கவிட்டனர்.

campaign eps Mayiladuthurai
இதையும் படியுங்கள்
Subscribe