சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.