ADVERTISEMENT

“சட்ட விரோதமாகப் பதவியைக் கொண்டு வந்தார் ஈபிஎஸ்” - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

06:01 PM Jan 05, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் முதல் நாள் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் நீதிபதிகள், ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பிடமும் சரமாரி கேள்விகளை எழுப்பினர். இருதரப்பும் தங்கள் வாதத்தினை முன் வைத்த நிலையில் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுக பொதுக்குழு வழக்கு 2ஆவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தார். தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் கொடுத்த ஓபிஎஸ் தரப்பு, “பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களைக் கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் என்றும் திருத்தப்பட்ட விதிகளுக்கும் அதற்கு முன்னர் இருந்த விதிகளுக்குமான ஒப்பீட்டு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா பதவிக்குப் பின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருக்கலாம்.

அவ்வாறு தேர்தலை நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேவைப்பட்டு இருக்காது. கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதியைக் கொண்டு வந்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்வு செய்த பின் தற்போது பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி மீண்டும் கொண்டு வர முயல்வது சட்ட விரோதமானது” எனக் கூறியது. தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT