அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின்ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவேஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 10 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகத்தகவல்வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகஇடைக்காலப் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில்நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும்தகவல்வெளியாகியுள்ளது.