Advertisment

அமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடந்த 'பவர்' ஃபைட்... அமைச்சர் போட்ட ப்ளான்! 

admk

தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரோனா கால நடவடிக்கையா? என்று விசாரிக்கும் போது, முதல்வர் எடப்பாடி, தனக்கு நெருக்கமான பலருக்கும் மணல் அள்ளும் உரிமத்தைக் கொடுத்திருந்தார். அப்படி மணல் எடுத்தவர்கள், ஆங்காங்கு இருந்த அதிகாரிகளைக் கவனித்துக் கொண்டார்களே தவிர, வெயிட்டாகக் கவனிக்க வேண்டிய மேலிடங்களைக் கவனிக்கவில்லை. அதனால் எடப்பாடிக்கும், துறை அமைச்சரான சி.வி.சண்முகத்துக்கும் இடையில் பெரும் ஃபைட்டே நடந்திருக்கிறது. இதில் எரிச்சலான எடப்பாடி, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக அவர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.பி.அன்பழகனை பவர் பாயிண்ட் ஆக்க முயற்சித்தார்.

Advertisment

இந்தக் கடுப்பில் யாரும் மணல் எடுக்கக்கூடாது என்று ஒரேயடியாக பிரேக் போட்டுவிட்டார் மந்திரி. இருந்தும் அங்கங்கே தூர்வாரும் சாக்கில் பலரும் மணலை வாரிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் காவிரி டெல்டாவில் குடிமராமத்துப் பணிகள் நடக்கிற இடத்திலும், ஆற்றின் கரைகளிலும் படித்துறைகளிலும் அளவுக்கதிகமான மண் அள்ளப்பட்டதால், தண்ணீர் வரும் சூழலில் விவசாயிகள் அச்சப்படும் சூழல் உருவாகியிருப்பதாகச்சொல்லப்படுகிறது.

Advertisment

admk eps minister politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe