முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையிலான உரசல் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா நடவடிக்கைகள் குறித்து, அடிக்கடி மக்கள் மத்தியில் தோன்றிபேட்டி கொடுப்பதோடு, அவரது மருத்துவ விசிட்டுகளையும் ஊடகங்கள் மூலம் முன்னிலைப்படுத்தி வந்தார். “வாழும் போதி தர்மரே” என்கிற ரேஞ்சுக்கு சோஷியல் மீடியாக்களில் பில்டப் தரப்பட்டது. இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குரிப்போர்ட் போக, அவரே நேரடியாக களத்திற்கு வந்தார். அம்மா உணவகத்தில் இட்லியை ஸ்பூனால் சாப்பிட்டு ஆய்வு நடத்திய முதல்வர், கவர்னரோடு ஆலோசிப்பதற்கு ராஜ்பவனுக்கு சென்றபோது கூட, சுகாதார அமைச்சரான விஜயபாஸ்கரை விட்டுட்டு, அந்தத் துறையின் செயலாளரான பீலா ராஜேசை மட்டும் அழைத்து கொண்டு சென்றார்.
 style="display:block"  data-ad-client="ca-pub-7711075860389618"  data-ad-slot="8252105286"  data-ad-format="auto"  data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/image (51)_2.jpg)
ஏற்கனவே எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டு முடக்கி வைக்கப்பட்டிருக்கும் துணை முதல்வரான ஓ.பி.எஸ்.தான் இந்த சமயத்தில் நாட்டாமையாக மாறி, முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் நடுவில் சமாதானம் பேசியதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் டெல்லியில் இருந்தும், சுகாதாரத்துறை அமைச்சரோடு இணக்கமாகப் போங்க என்று எடப்பாடிக்கு குறிப்பு வந்துள்ளதாக கூறுகின்றனர். முதல்வருடன் பிரதமர் மோடி ஆன்லைனில் ஆலோசனை மேற்கொண்டபோது, விஜயபாஸ்கரையும் தன்னுடனேயே உட்கார வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)