எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கும் முக்கிய நபர்... அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முதல்வர் எடப்பாடியின் உதவியாளரான கிரிதரன் இல்லத் திருமணம் கடந்தவாரம் சென்னை தியாகராயநகரில் நடந்து முடிந்தது. அண்மையில் எடப்பாடி வெளிநாட்டுப் பயணம் சென்றபோது, அங்கே பல்வேறு நிறுவனங்களை தொடர்புகொண்டு தொழில் முதலீடு பற்றியெல்லாம் ரூட் போட்டுக் கொடுத்தவர் இந்த கிரிதரன்தான் என்கின்றனர். தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்கள் பலரோடும் அவருக்கு நெருக்கமான நெருக்கம் இருப்பதாக சொல்கின்றனர். அதோடு எடப்பாடி தரப்பினரின் ரகசிய டீலிங்குகள் பலவற்றையும் இவர்தான் கவனித்துக் கொள்கிறார் என்கின்றனர். இப்படிப்பட்டவர் இல்லத் திருமணம் என்பதால், எடப்பாடியே மந்திரிகள் புடைசூழ நேரில் போய் வாழ்த்த, ஏகத்துக்கும் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது என்கின்றனர்.

admk

இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், தொழிலதிபர்களும் பெருமளவில் வந்து இருந்தார்கள். கோடிக்கணக்கில் மொய் வசூலானதோட, காஸ்ட்லி பரிசுப் பொருட்களும் அதிக அளவில் வந்ததாக கூறுகின்றனர். இப்படி ஆடம்பரமாக எல்லாம் நடந்தாலும், திருமண ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, தன் கண்ட்ரோலில் உள்ள இடங்களில் எல்லாம் இந்தத் திருமணத்தைக் காட்டி மெகா வசூல் நடத்தியிருக்கிறார். அதனால இந்தத் திருமண விவகாரம்தான் கோட்டை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.

admk eps function issues marriage minister
இதையும் படியுங்கள்
Subscribe