Advertisment

காலியான கூடாரம்; அதிர்ச்சியில் தமிழ்நாடு பாஜக

the empty tent; Tamil Nadu BJP in shock

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.

Advertisment

இக்கூட்டத்தில் பேசிய அவர், “உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார் மோடி. தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர், தமிழின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் மோடி” என்றார். வேலூர் பொதுக்கூட்டத்தில் வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போதே மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும் அமித்ஷா பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் வெளியேறியதால் இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன.

Advertisment

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe