Velmurugan

Advertisment

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்தி கைதான வேல்முருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செங்குறிச்சி சுங்கச்சாவடி சூறையாடல் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூடுதல், போராட்டம் நடத்துதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

வேல்முருகனை விடுவிக்கக்கோரி செல்போன் கோபுரம் மீதேறி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் வேல்முருகன் விடுவிக்கப்பட்டுள்ளார்.