Skip to main content

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (படங்கள்)

Published on 17/04/2019 | Edited on 17/04/2019




 

2019 பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 2ம் கட்டமாக 39 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தேர்தல் ஆணையம் இன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக பாலித்தீன் பேப்பர்களையும் வழங்கியுள்ளது. கூடாரம் வேய்ந்த சரக்கு வாகனங்கள் அல்லது சிறிய கன்டெய்னர் ரக வாகனங்களி வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேக் செய்து சீல் வைத்தப் பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்குகொண்டு செல்லப்படும். வெயில் மழையால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாலித்தீன் சாக்குகளில் பேக்கிங் செய்யப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்குப்பதிவு இயந்திரங்களில் தவறு வருவதற்கு வாய்ப்புள்ளது” - ஆர்.எஸ். பாரதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Voting machines are prone to error  R.S. Bharti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகங்களை போக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறையில் குறைபாடுகள் உள்ளன. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும். விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரத்தை பயன்படுத்தும் நடைமுறையை மாற்றுகின்றனர். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மின்னணு வாக்கு இந்திரங்கள் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும்.

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய நடைமுறையை மாற்ற வேண்டும். 17 சி விண்ணப்பம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள தகவல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 2 சதவிதம் அளவிற்கு தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

Next Story

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Supreme Court Notice to Election Commission

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டுகளை (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) முழுமையாக எண்ணக் கோரி ஏ.டி.ஆர். என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், “விவிபேட் (V.V.P.A.T.) இயந்திரங்களில் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் சரிபார்ப்பதற்கு மாறாக 100 சதவீதம் முழுமையாக ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “கூடுதல் அலுவலர்களை நியமித்து விவிபேட் இயந்திரத்தில் பதிவான அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.