மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விஷயங்களில் திமுக அரசின் செயல்களைக் கண்டித்து அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அதிமுக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.