Advertisment

தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்...! தினகரனைக் கலாய்த்த ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ‘மைக்’ பிடித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “திமுக-காங்கிரஸ் கூட்டணி 24 கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு 24 பிரதமரைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். ஒரே பிரதமர் மோடி எனச் சொல்லி சவால் விடுவது பா.ஜ.க. கூட்டணி மட்டுமே. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஒரே குழப்பமாக இருக்கிறது. காலையில் பத்திரிக்கையில் பார்த்தேன். திருமாவளவன் பானையை வைத்துக்கொண்டு செல்கிறார். பின்னால் வைகோ இரும்புக்கம்பியைக்கொண்டு பானையை உடைக்கப் போகிறார். விளங்குமா இந்தக் கூட்டணி?

Advertisment

In the election manifesto a helicopter for home rajendira balaji countered ttv dinakaran

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காங்கிரஸில் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவே இல்லை. எப்போது அறிவிப்பார்கள் என்று கேட்டேன் ஒரு காங்கிரஸ்காரரிடம். ஏப்ரல் 19-ஆம் தேதிதான் அறிவிப்பாங்க. அப்பத்தானே தேர்தல் முடிஞ்சிருக்கும். ஒரு பிரச்சனையும் வராதுன்னு சொன்னார். குஷ்புவுக்கும் திருநாவுக்கரசுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கெதுவும் தெரியாது. ஏப்ரல் 19-ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும். குஷ்புவுக்கும் திருநாவுக்கரசுக்கும் சண்டை வராது. யாருக்கும் பிரச்சனை வராது. விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் மச்சினனை வேட்பாளராக அறிவிக்கப் போறதாச் சொன்னாங்க. அவர் யாருன்னு கேட்டேன். பம்பாய்ல கடத்தல் தொழில் பண்ணுறாருன்னு சொன்னாங்க. அங்கே கடத்தல் தொழில் பண்ணுறவருக்கு இங்கே எதுக்கு சீட் கொடுக்குறீங்கன்னு கேட்டேன். அவருகிட்டதான் துட்டு இருக்குன்னு சொல்றாங்க. காங்கிரஸ்ல யாருக்கும் சீட் கொடுக்க முடியல. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கிறதுக்கு முன்னால நம்மாளுங்க ஜெயிச்சு டெல்லிக்கு போயிருவாங்க.” என்றார்.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் “அமமுக களத்திலேயே இல்லை. அந்தக் கட்சி தேர்தல் அறிக்கையில் என்ன வேணும்னாலும் கொடுக்கலாம். தனி சேட்டிலைட், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டுக்கு ஒரு ஸ்கார்பியோ கார்ன்னு என்னன்னாலும் சொல்லலாம். அந்தக் கட்சிதான் களத்திலேயே இல்லியே. தங்கத்தமிழ்ச்செல்வன் அங்கே போய் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. அங்கேயிருக்கிறவங்க எங்கிட்டும் போகமுடியல. விதிபோன போக்குல போய்க்கிட்டிருக்காங்க. கரைஞ்சுக்கிட்டிருக்கு டிடிவி அணி. தங்கத்தமிழ்ச்செல்வன் தேர்தல் வர்றதுக்குள்ளேயே வெளியே வந்திருவார். தேனியில் தினகரன் எப்படி நிற்பாரு? அவருக்குத் தெரியாதா அவருடைய பலம்? ஏற்கனவே 20 ரூபா டோக்கன் கொடுத்துத்தான் ஆர்.கே. நகர்ல ஜெயிச்சாரு. திரும்பவும் போயி தேர்தல்ல நின்னா, டோக்கனை வச்சே அடிப்பாங்க. அந்த சோலியே வேணாம்னு முடிவு பண்ணிட்டாரு. இந்தத் தேர்தலோடு அந்தக் கட்சிக்கு மூடு விழா நடத்தி, எல்லாரும் தாய்க் கழகமான அதிமுகவுக்கு வந்திருவாங்க.

கமலஹாசன் கட்சிய பத்தி எதுக்கு கேட்கிறீங்க? எங்கேயாச்சும் கமலஹாசன் கட்சிக்காரங்கள பார்க்க முடியுதா? அவங்கபாட்டுக்கு பத்துக்குப் பத்து ரூம்ல கூட்டம் போட்டு பேசி முடிச்சிடறாங்க. அங்கேயே வேட்பாளரையும் அறிவிச்சிடறாங்க. அவ்வளவுதான். இங்கே மாதிரி கூட்டமெல்லாம் கமலஹாசனால கூட்ட முடியுமா?” என்றார் கிண்டலாக.

தனது பேச்சில், காங்கிரஸை அமைச்சர் அதிகமாகவே கலாய்த்திருந்த நிலையில், அக்கட்சி தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

‘கழுத.. காசா பணமா.. அடிச்சு விடு’ என்று கிராமங்களில் சொல்வார்கள் அல்லவா? அதுபோலத்தான் இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பேச்சும், பேட்டியும்.

admk ammk congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe