Advertisment

இடைத்தேர்தலில் தோல்வி... திமுக தலைவருக்கு தப்பான ஐடியா தந்தாரா முக்கிய பிரமுகர் ?

சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்துள்ளது அதிமுக கூட்டணி. இரண்டு தொகுதிகளும்மே எதிர்கட்சியிடம் இருந்த தொகுதிகள், தற்போது ஆளும்கட்சியிடம் சென்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக, திமுக முதுகில் சவாரி செய்யப்பட்ட கட்சி. தற்போது தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அது வலிமையாகவுள்ள தொகுதியில் தோற்றதால் திமுகவினரை அதிருப்தியடைய வைக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதி தோல்வி திமுகவின் ஒரு பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

election loss

இதுப்பற்றி நம்மிடம் பேசிய திமுகவினர். விழுப்புரம் மாவட்டம் என்பது வன்னியர்களும் – ஓடுக்கிவைக்கப்பட்டுள்ள சாதி மக்களும் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம். இந்த மாவட்டத்துக்குள் வருவது தான் விக்கிரவாண்டி. இந்த விக்கிரவாண்டியில் பெரும் பலமாக வன்னியர்கள் இருந்தார்கள். இந்த தொகுதியில் வன்னிய சாதி மக்களுக்காக கட்சி நடத்தும் பாமக பலமாகவுள்ளது.

Advertisment

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக இந்த தொகுதியில் வாங்கிய ஓட்டுகள் 40 ஆயிரம் சொச்சம். திமுக வேட்பாளர் ராதாமணி வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர் மரணத்தால் தான் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக வெற்றி பெற்றுயிருந்த தொகுதியில் தற்போது திமுக தோல்வியை தழுவியதற்கு காரணம் சாதி தான்.

இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலை திமுக அதிமுக மோதலாக்காமல், திமுக பாமக மோதலாக்கியது அதிமுக. தேர்தல் நேரத்தில் திமுக பாமக தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற அறிக்கை யுத்தம், வார்த்தை யுத்தம் என நடத்திக்கொண்டுயிருந்தது. அதிமுக கச்சிதமாக தேர்தல் வேலையை பார்த்தது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளின் வாக்குகளை கூட தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டது. அதற்கு திமுக முன்வைத்த வன்னியர் சமுதாயத்திற்கு பிற்காலத்தில் தரப்போகும் சலுகைகள், ஆட்சியில் இருந்தபோது தந்த இடஒதுக்கீடு போன்றவற்றை பட்டியலிட்டது.

இந்த மோதல் நடந்துக்கொண்டுயிருந்தபோது திமுக வன்னியர் கட்சி எனச்சொல்லி தலித் வாக்குகளையும், விடுதலை சிறுத்தைகள் வாக்குகளை வளைத்தது ஆளும்கட்சியான அதிமுக. அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, திமுக வன்னியர் விரோத கட்சி. நம்மை ஏமாற்றுகிறது திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் எனச்சொல்லி பிரச்சாரம் செய்தது. அதனால் தான் இந்த தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் புகழேந்தி வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தும் வெற்றி பெற முடியாமல் போனதுக்கு காரணம், அதிமுக வின் தெளிவாக தேர்தல் யுக்தி.

election loss

சாதாரண இடைத்தேர்தலுக்கு, களத்தில் சாதியை இழுத்துயிருக்க தேவையில்லை. வன்னியர் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் எனச்சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின் மனதை மாத்தி தேர்தல் பொறுப்பாளர்கள் சிலர், ஸ்டாலினிடம் அறிக்கை வெளியிட வைத்தார்கள். அந்த அறிக்கைகள், பேச்சுகள் அந்த சாதியிலும் எடுப்படவில்லை, கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளும் அதனை விரும்பவில்லை, அதனை அதிமுக பயன்படுத்திக்கொண்டது என்கிறார்கள் தேர்தல் களத்தில் உழைத்த பிறமாவட்ட கட்சி சீனியர்கள்.

அவர்களே தொடர்ந்து, சாதி சார்ந்து அறிக்கை யுத்தம் நடத்த திமுக தலைவருக்கு ஐடியாவை தந்தது, கட்சியில் நான்தான் முக்கிய பிரமுகர் என காட்டிக்கொள்பவர் தான் என்கிறார்கள். தோல்விக்கு பின் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாம் தலைமை. அவர் மீது கோபத்தை காட்ட சில நாட்களாக அறிவாலயம் பக்கம்மோ, திமுக தலைவர் வீட்டு பக்கம் கூட போகாமல் பதுங்கிக்கொண்டுள்ளார் என்கிறார்கள் கட்சியின் உள் விவரம் அறிந்தவர்கள்.

elections nanguneri Vikravandi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe