வரும் மே 24-ம் தேதியுடன் தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைக்கு பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் கமி‌ஷன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையப் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழுவினர் கிண்டியில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினர்.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும்பங்கேற்றனர்.